செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (16:45 IST)

இளைஞரின் வயிற்றில் கத்தி, நகவெட்டி... அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள்..!

பீகார் மாநில இளைஞரின் வயிற்றில் கத்தி மற்றும் நகவெட்டி இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் 22 வயது இளைஞர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அவருடைய வயிற்றில் சில உலோகப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

 இதனை அடுத்து டாக்டர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்களிடம் அனுமதி வாங்கி அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவரது வயிற்றில் சிறிய வகை கத்தி, இரண்டு நகவெட்டி, சாவி வளையம் உள்பட சில உலகப் பொருள்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து இளைஞரிடம் மருத்துவர்கள் கேட்டபோது சமீப காலமாக அவருக்கு உலோகப் பொருட்களை விழுங்கும் பழக்கம் இருந்ததாக தெரியவந்தது. மேலும் அந்த இளைஞர் சில மனநல பிரச்சனைகளுடன் இருக்கிறார் என்றும் அதற்காக மருந்துகள் சாப்பிட்டு வந்ததாகவும் அவ்வப்போது அவர் உலகப் பொருட்களை விழுங்கி விடுவதாகவும் கூறப்பட்டது .

தற்போது இளைஞரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் இனிமேல் அவர் உலோகப் பொருட்களை விழுங்காமல் பார்த்துக் கொள்ளும்படி அவரது உறவினர்களிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Edited by Siva