ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (22:11 IST)

பிரதமர் இல்லத்தில் தீ விபத்து குறித்து குஷ்பு டுவீட்!

இன்று இரவு பிரதமர் இல்லத்தில் திடீரென சிறிய அளவில் தீ விபத்து நடந்ததும் இந்த தீ விபத்தை அடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீ விபத்தை கட்டுப்படுத்தியமான செய்திகள் பரபரப்பாக வெளிவந்தது
 
இதனையடுத்து இந்த தீ விபத்து குறித்து ஒரு விளக்கத்தை பிரதமர் மோடி அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்தார். பிரதமர் இல்லத்திலோ அல்லது அலுவலகத்திலோ தீ விபத்து நடக்கவில்லை என்றும், பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில் உள்ள செக்யூரிட்டி பகுதியில்தான் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தற்போது தீ முழு அளவில்கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார் 
 
இந்த நிலையில் பிரதமர் இல்லத்தில் நடந்த தீ விபத்தை அடுத்து முக்கிய தலைவர்கள் அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர். இதனை அடுத்து காங்கிரஸ் பிரமுகரும் நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி அவர்களின் இல்லத்தில் நடந்த தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதாகவும், அவர் நலமாக இருப்பதாக நம்புகிறேன் என்றும், கவனமாக இருங்கள் பிரதமர் அவர்களே! என்றும் குஷ்பு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் 
 
பிரதமர் மோடியை அரசியல்ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்து வரும் குஷ்பு நாட்டின் பிரதமர் என்ற முறையில் அவரது  பாதுகாப்பு குறித்து அக்கறையுடன் விசாரித்ததை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்