தொடர்புடைய செய்திகள்
- நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா
- ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?
- என்னது லாராவோடு பாபர் ஆசாமை ஒப்பிடுவதா?... தொகுப்பாளரை அடிக்கப் பாய்ந்த ஹர்பஜன்!
- உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் கிரிக்கெட் மைதானம் போன்ற கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்!
- இந்தியா வெற்றியை கொண்டாடியபோது பட்டாசு வெடித்து பலியான சிறுவன்!
மூடப்படுகிறது கூ செயலி.. போதிய வரவேற்பு இல்லாததால் நிரந்தர மூடுவிழா..!
கடந்த 2020 ஆம் ஆண்டு ட்விட்டர் செயலிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட கூ செயலியை நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சமூக வலைதளமான கூ மூடப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூ நிறுவனத்தின் நிறுவனர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல பெரிய இணையதள நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுடன் சேர்ந்து நாங்கள் ஆய்வு செய்தபோது நாங்கள் விரும்பிய முடிவை கூ செயலி கொடுக்கவில்லை என்றும் இதனை இயங்க வைத்தாலும் விலை அதிகமாக உள்ளது என்றும் எனவே இதை மூட வேண்டிய கடினமான முடிவை நாங்கள் எடுத்து உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட கூ செயலி ட்விட்டருக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2023 ஆம் ஆண்டில் அதன் பணியாளர்கள் செலவுக்கு கூட வருமானம் இல்லை என்பதால் தற்போது இந்த செயலியை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மீண்டும் சில ஆண்டுகள் கழித்து வருவோம் என்றும் வேறு வழியில் நீங்கள் எங்களை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran
