வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2018 (15:58 IST)

ஏடிஎம் இயந்திரத்தில் சிறுநீர் கழித்த வாலிபர் கைது

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பணம் வராததால் ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் சிறுநீர் கழித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒலவக்கோடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் கீழ் ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று காலை ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லை என வாடிக்கையாளர்கள் வங்கிக்கு புகார் செய்துள்ளனர். 
 
இதையடுத்து தொழில்நுட்ப குழு ஏடிஎம் இயந்திரை சோதனை செய்துள்ளனர். அதில் பணம் வைக்கும் இடத்தில் திரவம் இருந்துள்ளது. அது சிறுநீர் வாடை வீசியுள்ளது. பின்னர் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
 
அப்போது அதிகாலையில் ஒருவர் பணம் எடுக்க ஏடிஎம் கார்ட்டை பயன்படுத்தியுள்ளார். ஆனால் பணம் வரவில்லை. அவர் பணம் வரும் பகுதியில் சிறுநீர் கழித்தார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் இதுகுறித்து வங்கி அதிகாரிகள் பாலக்காடு தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
 
விசாரணையில் ஏடிஎம் இயந்திரத்தில் சிறுநீர் கழித்தது அதே பகுதியில் உள்ள தீனு(19) என்ற வாலிபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.