நடிகை உடை மாற்றுவதை தலை கீழாக தொங்கி பார்த்தவர் திலீப் - எழுத்தாளர் பகீர் தகவல்


Murugan| Last Updated: வெள்ளி, 14 ஜூலை 2017 (15:43 IST)
கேரள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

 
அவருக்கு எதிராக வலுவான ஆதரங்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அவரை பற்றிய பல விஷயங்களை மலையாள சினிமா உலகினர் தற்போது பேசத் துவங்கியுள்ளனர். அதுவும் எழுத்தாளர் ரபீக் சீலர் தன்னுடைய முகநூலில் பதிவு செய்துள்ள விஷயம் கேரள சினிமா உலகினர் மட்டுமில்லாமல், ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒருமுறை, ஒரு படப்பிடிப்பிற்காக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார் திலீப். அப்போது, அப்படத்தில் நடிக்கும் மற்றொரு நடிகையும் அந்த ஹோட்டலில் தங்கியிருந்தார். அந்த நடிகை ஆடை மாற்றுவதை, மொட்டை மாடியில் இருந்து தலை கீழாக தொங்கியபடி திலீப் பார்த்ததாகவும், அவர் கீழே விழுந்துவிடாமல் இருக்க, அவரின் கால்களை மற்றொரு நபர் பிடித்துக் கொண்டதாகவும்  ரபீக் சீலர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதை தான் பார்த்து விட்டதாகவும், தன்னிடம் கையும் களவுமாக பிடிபட்டதை அவர் மறக்கமாட்டார் எனவும், அதை மனதில் வைத்து தன்னுடைய வளர்ச்சியை தடுக்க திலீப் முயற்சித்தார் எனவும் ரபீக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த விவகாரம் கேரள சினிமா உலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :