செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 நவம்பர் 2022 (11:35 IST)

பைக் டாக்சி புக் செய்த கேரள பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! – பெங்களூருவில் அதிர்ச்சி!

abuse
பெங்களூரில் இரவில் பைக் டாக்சி புக் செய்த இளம்பெண்ணை ஓட்டுனர் நண்பருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த பார்ட்டிக்கு சென்ற அவர் மது அருந்தியுள்ளார்.

பின்னர் தனது வீட்டிற்கு செல்வதற்காக பைக் டாக்சி புக் செய்துள்ளார். பைக் டாக்சியில் இளம்பெண்ணை ஏற்றி சென்ற ஓட்டுனர் சகாபுதீன் இளம்பெண் போதையில் இருப்பதை அறிந்து அந்த பெண்ணின் வீட்டிற்கு அழைத்து செல்லாமல் தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.


அங்கு சகாபுதீனும், அவரது நண்பர் அக்தர் என்பவரும் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு சகாபுதீனின் காதலியும் உடந்தையாக செயல்பட்டுள்ளார். காலையில் எழுந்த இளம்பெண்ணிடம் அவர் போதையில் இருந்ததால் இங்கு தங்க வைத்ததாக கூறியுள்ளனர்.

அவரும் நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்ற பின்னர் உடல்வலி, உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்கு சென்றபோதுதான் அவர் மதுபோதையில் இருந்தபோது வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பெங்களூர் போலீஸார் சகாபுதீன், அவரது நண்பர் மற்றும் காதலி ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K