திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (07:50 IST)

ஐஸ்பக்கெட், கிகி சேலஞ்சை அடுத்து 'நில்லு நில்லு சேலஞ்ச்': போலீசார் எச்சரிக்கை

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் மற்றும் கிகி சேலஞ்ச் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது 'நில்லு நில்லு சேலஞ்ச்' என்ற ஆபத்தான சேலஞ்ச் மிக வேகமாக பரவி வருகிறது. ஓடும் வாகனங்களை நிறுத்தும் இந்த 'நில்லு நில்லு சேலஞ்சை' மக்கள் தொடர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த 'நில்லு நில்லு சேலஞ்ச்' கேரளாவில் மிக வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களால் நடத்தப்படும் இந்த சேலஞ்சால் விபத்து ஏற்படும் ஆபத்து இருப்பதாக கேரள போலீசார் எச்சரித்துள்ளனர்

இருப்பினும் இந்த சேலஞ்சை கேரள இளைஞர்கள் தொடர்ந்து நடத்தி அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கின்றனர். இந்த சேலஞ்ச் காரணமாக வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். திடீரென நான்கு அல்லது ஐந்து இளைஞர்கள் ஓடும் வண்டியை நிறுத்துவதால் ஓட்டுனர்கள் நிலை தடுமாறி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த மலையாள திரைப்படமான 'ரெயின் ரெயின் கோ அகைன்' என்ற படத்தில் 'நில்லு நில்லு' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல்தான் தற்போது திடீரென வைரலாகி 'நில்லு நில்லு சேலஞ்சாகவும் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.