செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 ஜூன் 2021 (10:52 IST)

22 நாட்கள்; கொடூர சித்திரவதை; பாலியல் வன்கொடுமை! – கேரளாவை உலுக்கிய சைக்கோ!

கேரளாவில் இளம்பெண் ஒருவரை ஒரு மாத காலமாக அடைத்து வைத்து கொடுமை செய்த சைக்கோ இளைஞர் பிடிப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்

கேரள மாநிலம் கன்னூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திரிச்சூரை சேர்ந்த ஷேர்மார்க்கெட் தொழிலதிபராக இருந்து வந்த மார்டின் ஜோசப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணமாகமலே லிவ் இன் உறவில் கொச்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்துள்ளனர்.

சில நாட்களில் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள், சண்டை ஏற்படவே இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறி சொந்த ஊர் சென்றுள்ளார். ஆனால் திரும்ப வராவிட்டால் இருவரும் இணைந்து எடுத்த நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் விட்டுவிடுவதாக மார்டின் ஜோசப் மிரட்டியுள்ளார். அதற்கு பயந்து இளம்பெண் மீண்டும் கொச்சி செல்ல விபரீதம் நடந்துள்ளது.

இளம்பெண்ணை ஒரு மாத காலமாக வீட்டுக்குள் அடைத்து வைத்த மார்டின் ஜோசப் அவர்மீது மிளகாய் பொடி தூவுதல், கொதிநீரை ஊற்றுதல் என பல சித்திரவதைகள் செய்துள்ளான். மேலும் அடிக்கடி பாலியன் வன்கொடுமையும் செய்துள்ளான். ஒருவழியாக அங்கிருந்து தப்பிய இளம்பெண் சொந்த ஊர் திரும்பி போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தனிப்படை அமைத்த கேரளா போலீஸார் தலைமறைவாக திரிந்த மார்டின் ஜோசப்பை கைது செய்துள்ளனர்.