புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (23:26 IST)

கேரள விமான விபத்து : 14 பேர் உயிரிழப்பு… விபத்து வேதனை அளிப்பதாக மோடி டுவீட்

கேரள மாநிலம் கோழிக்கோடில்  , மோசமான வானிலையால் விமான ஓடுதளத்தில், இறங்கிய ஒரு விமானம் இரண்டாக உடைந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. அதனால் அங்கு நிலப்பரப்பு ஈரப்பதமாக இருந்ததாகத் தெரிகிறது.

இன்று துபாயில் இருந்து இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாய்நாடு நோக்கி கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு அழைத்து வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 191 பணிகள் பயணம் செய்த விமானத்தில் முதற்கட்ட தகவலின்படி  14  பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது. 15 பேர் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக உள்ளனர் எனவும் , 123 பேர் காயமடைந்துள்ளதாக மலப்புரம் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தார். மத்திய அரசின் சார்பில் உதவிகள் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும்,  பிரதமர் மோடி கேரள விமான விபத்து வேதனை அளிப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த கேரள பன்னாட்டு விமான நிலையம் 342 அடியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.