திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (13:33 IST)

நிலச்சரிவில் ஒரு ஊரையே காணவில்லை; ஆற்றின் பாதையும் மாறியது: மக்கள் அதிர்ச்சி..!

Wayanad Landslide
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு ஊரையே காணவில்லை என்றும் ஆற்றின் பாதையே திடீரென மாறிவிட்டது என்றும் கூறப்படுவது அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள முண்டக்கை உள்ளிட்ட சில ஊர்களில் அனைத்து வீடுகளும் மண்ணால் மூடப்பட்டு இருப்பதாகவும் அழகிய கிராமங்களாக இருந்த இந்த பகுதி தற்போது போர்க்களம் போல் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 
குறிப்பாக முண்டக்கை கிராமத்தில் சில கிலோமீட்டர் வரை மக்கள் வாழ்ந்த தடயமே இல்லை என்றும் இந்த பகுதியில் உள்ள ஒரு ஊரையே காணவில்லை என்றும் மக்கள் கதறி அழுது கொண்டிருக்கின்றனர்.
 
 மேலும் எரிவழிஞ்சு என்ற ஆற்றின் பாதை மாறி ஒரு கிராமத்திற்கு நடுவே தற்போது திடீரென ஓடிக் கொண்டிருப்பதாகவும் சில நாட்களுக்கு முன்பு வரை அங்கு ஒரு கிராமம் இருந்த நிலையில் தற்போது அந்த கிராமம் இருந்த சுவடே தெரியவில்லை என்றும் அந்த பகுதியில் ஆறு ஓடிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
ஆற்றங்கரை ஓரம் இருந்த கிராமங்கள் என்ற நிலை மாறி தற்போது கிராமமே ஆறாக மாறி உள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிய பாதையில் ஓடும் ஆறு அந்த பகுதியில் இருந்த வீடு வாசல் அனைத்தையும் வாரிசுருட்டி கொண்டு விட்டது என்றும் இந்த கிராமத்தில் தான் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் அமைந்திருந்தன என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran