20000 கோடி ரூபாய் ஒதுக்கீடு….சபாஷ் சரியான நடவடிக்கை – பினராயி விஜயனுக்குக் குவியும் பாரட்டுகள்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாக இருக்கும் வேளையில் அதன் முதல்வர் பினராயி விஜயன் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்குப் பாராட்டு கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. சீனாவில் தொடங்கி கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 2,00,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 150 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ள முக்கிய திட்டங்கள் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் அறிவித்த சில திட்டங்கள்
-
கொரோனா வைரஸ் 20,000 கோடி ரூபாய்க்கான திட்டத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
-
மாநிலம் முழுவதும் ஆயிரம் ஹோட்டல்கள் திறக்கப்பட்டு, அதில் அனைவருக்கும் 20 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும். இதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
-
மின்சாரம், தண்ணீர் கட்டணம் செலுத்த ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
-
500 கோடி ரூபாய்க்கு மெடிக்கல் பேக்கேஜ்
-
எல்லா குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கான இலவச உணவு பொருட்கள் வழங்கப்படும்.
-
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிதி உதசி வழங்கப்படும்.
-
முதியோர் பென்சன் பெறுபவர்களுக்கு இரண்டு மாத பென்சன் சேர்த்து வழங்கப்படும். அதற்காக, 1,320 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
நூறு நாள் வேலை உறுதித்திட்ட தொழிலாளர்களுக்கென 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.