அடுத்த குடியரசு தலைவராக ஒரு தமிழர் வர வாய்ப்பு!
அடுத்த குடியரசு தலைவராக ஒரு தமிழர் வர வாய்ப்பு!
தற்போது குடியரசு தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசு தலைவராக கேரளா ஆளுநர் தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குடியரசு தலைவர் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என பாஜக மற்றும் எதிர்கட்சிகள் முயற்சிகளில் இறங்கியுள்ளன. எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை களம் இறக்க முயற்சிகள் நடைபெறுகிறது. அதே நேரம் தாங்கள் களம் இறக்கும் வேட்பாளர் எதிர்ப்பு இல்லாமல் போட்டியின்று தேர்ந்தெடுக்கப்படனும் என பாஜக நினைக்கிறது.
இந்நிலையில் பாஜக சார்பில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரௌபதி முர்மு களம் இறக்கப்படலாம் என கூறப்பட்டது. அவரை களம் இறக்க காரணம் அவர் ஒரு பெண் வேட்பாளர் என்பது மட்டுமல்லாமல் அவர் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர். இதனால் அவருக்கு எதிர்ப்பு இருக்காது மற்ற கட்சிகள் ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என பாஜக திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது இந்த குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் தமிழகத்தை சேர்ந்த கேரள ஆளுநர் சதாசிவம் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து பதவி ஓய்வு பெற்றவர். தற்போது கேரளா அளுநராக உள்ள இவர் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுடன் நல்ல நட்புடன் உள்ளார்.
இவரை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவித்தால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பாஜக நினைக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் இது தொடர்பான இறுதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.