திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2017 (11:37 IST)

மதுகடைகளில் பெண்களுக்கு வேலை: கேரள அரசு அதிரடி முடிவு!!

கேரள அரசு பெண்களுக்கு மதுகடைகளிலும் வேலை வழங்க வேண்டும் என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளது.


 
 
சமீபத்தில் கேரளாவில் பிரமணர் அல்லாத மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் அட்சகராக நியமிக்கப்பட்டனர்.
 
தற்போது கேரள அரசு மதுக்கடைகளில் பெண்களை விற்பனையாளர்களாக நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
கேரளாவில் அரசு மதுபான விற்பனை கழகத்தின் சார்பில் சுமார் 350 சில்லரை மது விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஆண்கள் மட்டுமே விற்பனையாளர்களாக உள்ளனர். 
 
எனவே, அரசு மதுக்கடைகளில் விற்பனையாளர்களாக பெண்களை  நியமிக்கவேண்டும் என்று எழுந்த கோரிக்கையின் பெயரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.