வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 25 ஆகஸ்ட் 2018 (07:18 IST)

கேரள வெள்ள நிவாரண நிதியாக பில்கேட்ஸ் கொடுத்த தொகை

சமீபத்தில் கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதேபோல் நிலச்சரிவால் அம்மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகிவிட்டன. இம்மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப இன்னும் ஒருசில வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் கேரள மக்களை மீண்டும் சகஜநிலைக்கு கொண்டு வர இந்தியா முழுவதிலும் இருந்து மட்டுமின்றி உலக நாடுகளிடம் இருந்தும் கோடிக்கணக்கில் நிதிகள் குவிந்து வருகிறது.
 
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ், கேரள மாநிலத்தின் வெள்ள நிவாரண நிதியாக தனது கேட்ஸ் பவுண்டேசன் மூலம் ரூ.4¼ கோடி நிதியாக வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து பில்கேட்சின் அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், ‘கேரளாவின் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் யுனிசெப் உள்பட அனைத்து தொண்டு நிறுவனங்களும் மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து நோய் பரவாமல் தடுக்க மேற்கொள்ள எடுத்துள்ள நடவடிக்கைகள் சுகாதார பணிகளுக்கு நாங்கள் அளித்துள்ள நிதி, மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்‘ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.