1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (08:36 IST)

வெள்ளம் வடியாததால் மணப்பெண்ணை சுமந்து சென்ற மணமகன்: கொச்சியில் சுவாரஸ்யம்

கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழை நின்றுவிட்டபோதிலும் இன்னும் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடியாததால் அம்மாநில மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில்தான் நடந்து செல்கின்றனர்.
 
இந்த நிலையில் கொச்சியில் ஏற்கனவே நடத்த திட்டமிட்டிருந்த ஒரு திருமணம் இன்று நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்கு மணமகள் அலங்காரம் செய்து காரில் மண்டபத்திற்கு வந்தபோது மண்டபத்தின் எதிரே முழங்கால் அளவு தண்ணீர் இருந்தது. இதனால் மணப்பெண் காரில் இருந்து இறங்க தயங்கியபடி இருந்தார்.
 
அப்போது மண்டபத்தில் இருந்த மணமகன், சற்றும் யோசிக்காமல் தண்ணீரில் இறங்கி மணமகளை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு அவரை நனையாமல் மண்டபத்திற்குள் தூக்கி சென்றார். இதுகுறித்து வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருமண கோலத்தில் இருந்த மணப்பெண், மழை நீரில் நனையாமல் இருப்பதற்காக மணமகன் சுமந்து சென்ற காட்சியை திருமணத்தில் கலந்து கொள்ள வந்த விருந்தினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.