ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (13:01 IST)

எனக்கு இப்பவே இங்கயே கல்யாணம் பண்ணி வை! அடம்பிடிக்கும் பொடியன்! – வைரலாகும் வீடியோ!

கேரளாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனக்கு திருமணம் செய்ய கூறி தன் அம்மாவிடம் அடம்பிடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம்தான். அதுவும் தற்போதைய இணைய தொழில்நுட்ப காலத்தில் உலகெங்கிலும் எந்த குழந்தை குறும்பு செய்தாலும் உடனடியாக அது வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவிடுகிறது.

அந்த வகையில் கேரளாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் தன் தாயிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தனது மாறாத மழலை குரலில் கேட்கும் வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.