புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம்: கேரள அரசு அறிவிப்பு!

kerala
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்பதும் இதனை அடுத்து ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கtஹு.
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததால் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நீக்கப்பட்டன.
 
மாஸ்க் அணிதன், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவை மட்டும் சுய விருப்பத்தின் பேரில் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் தற்போது கேரள மாநில அரசு அனைத்து கொரோனா  கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. முக கவசம் அணிதல் மற்றும் கைகளை சுத்தப்படுத்துதல் ஆகியவை மட்டும் தொடர்ந்து அமலில் இருக்குமென்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது