Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2017 (20:59 IST)
கேரள சட்டசபையில் பெரும் புயலை கிளப்பிய பாவனா விவகாரம்
பிரபல நடிகை பாவனா கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான அதிர்ச்சி சம்பவம் தென்னிந்திய திரையுலகையே அதிர வைத்தது.
இந்நிலையில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி சுனில் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கேரள சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டதால் பெரும் அமளி ஏற்பட்டது
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 'நடிகை பாவனா விவகாரத்தின் பின்னணியில் இருக்கும் சதியை வெளியே கொண்டு வருவதில் மாநில அரசு தீவிரம் காட்டவில்லை' என்று குற்றஞ்சாட்டினர்
இந்த குற்றச்சாட்டுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பேரவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் சட்டப் பேரவையை அவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் சிறிது நேரம் ஒத்திவைத்தார்
இருப்பினும் மீண்டும் பேரவை கூடியபோதும் இந்த பிரச்சனை காரணமாக அமளி நீடித்தது. பின்னர் பேரவையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தன
மாநிலத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது, நடிகைக்காக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டது குறித்து கேரள மக்கள் அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.