பிரபல வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு: நடிகை கஸ்தூரி கணிப்பு
இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கியமான வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த முடிவுகளை தற்போது பார்போம்
வயநாடு மற்றும் அமேதி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெறுகிறார்
வாரணாசியில் பிரதமர் மோடி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்.
டெல்லி கிழக்கு தொகுதியில் கவுதம் காம்பீரை ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி மெர்லெனா தோற்கடிக்கின்றார்
தென்சென்னையில் ஜெயவர்தனும், மத்திய சென்னையில் தயாநிதி மாறனும், வடசென்னையில் கலாநிதி வீராசாமியும் வெற்றி பெறுவார்கள்
கோவையில் பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணனும், மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் வெங்கடேசனும், தூத்துகுடியில் கனிமொழியும், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரமும், திண்டுக்கல்லில் திமுகவின் வேலுசாமியும் வெற்றி பெறுவார்கள்
கன்னியாகுமரியில் பொன்ராதாகிருஷ்ணனும் வசந்தகுமாரும் கிட்டத்தட்ட சமநிலையில் இருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது.
மொத்தத்தில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி 10 முதல் 15 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 25 முதல் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
இவ்வாறு நடிகை கஸ்தூரி கணித்துள்ளார்.