திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (21:51 IST)

தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர்: கர்நாடகா ரிபோர்ட்!

காவிரி மேலாண்மை அமைப்பு அமைக்கப்பட்டதில் இருந்து அவ்வப்போது ஒழுங்காற்று குழுவும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று டெல்லியில் காவிரி ஒழுங்காற்று கூட்டம் நடைபெற்றது. 
இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளா, கா்நாடகா, புதுச்சேரி மாநில உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இந்த கூட்டத்தில் கா்நாடகா தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 
 
அதில், ஜூலை மாதத்தில் 82 டிஎம்சி அளவிற்கு காவிரியில் கூடுதலாக நீா் திறந்து விடப்பட்டுள்ளது. அதாவது, ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு 58 டிஎம்சி நீா் வழங்கப்பட வேண்டிய நிலையில் கூடுதலாக 82 டிஎம்சி நீா் வழங்கப்பட்டது என ரொபோர்ட் சமர்பிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் அடுத்த ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்தக்கட்ட கூட்டம் செப்டம்பா் 2 வது வாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.