வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2020 (08:15 IST)

பஞ்சாயத்து தேர்தல்னா என்னன்னு தெரியாது! – 72 வருடங்களாக தேர்தலை பார்க்காத கிராமம்!

கர்நாடகாவில் பஞ்சாயத்து தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் கடந்த 72 வருடங்களாக பஞ்சாயத்து தேர்தலையே பார்க்காத கிராமம் ஒன்று உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், நீதிமன்றம் தேர்தலை நடத்த அனுமதி அளித்துள்ளது. இதனால் எதிர்வரும் 22 முதல் 27 வரை கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பெலகாவி மாவட்டத்தில் உள்ள பெல்லத பாகெவாடி என்னும் கிராமத்தில் கடந்த 72 ஆண்டுகளாக பஞ்சாயத்து தேர்தலே நடைபெறாத சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 9 வார்டுகளுக்கும் 33 உறுப்பினர்களையும் அந்த மக்கள் ஒருமனதாகவே தேர்ந்தெடுத்து விடுவதால் தேர்தலுக்கு அவசியமில்லாமல் போய் விடுகிறதாம். 1977ம் ஆண்டில் ஒரு வார்டுக்கு மட்டும் ஒரே ஒருமுறை மட்டும் தேர்தல் நடத்ததாகவும் அதற்கு பிறகு இதுவரை அங்கு தேர்தலே நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது தேர்தல் நடத்த மாநில அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு முன்னரே 9 வார்டுகளுக்குமான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.