வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 23 அக்டோபர் 2023 (10:13 IST)

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி.. கர்நாடக அமைச்சர் அறிவிப்பு..!

கர்நாடக தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முஸ்லிம் பெண் தேர்வர்கள் ஹிஜாப் அணிந்து எழுத அனுமதி வழங்கப்படும் என்று கர்நாடக அமைச்சர் சுதாகர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு ஹிஜாப் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள்   வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் சுதாகர் கூறுகையில், "தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் மாணவ, மாணவிகள் தங்களின் தனிப்பட்ட உடைகளை அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத விரும்பினால், அதற்கு அனுமதி வழங்கப்படும்" என்று கூறினார்.

கர்நாடகாவில்  கடந்த 2022 ஆம் ஆண்டு, பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வர அனுமதி வழங்கக் கோரி முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம், பள்ளிகளில் மத அடையாள அணிகளை அணிந்து வர தடை விதித்தது. இந்தத் தீர்ப்பால் முஸ்லிம் மாணவிகள், தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் ஹிஜாப் அணிந்து எழுத முடியாத நிலையில் இருந்தனர்.

இந்த நிலையில், அமைச்சர் சுதாகர் அறிவிப்பு ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva