திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (16:28 IST)

செல்ஃபியா? மீண்டும் கைகளை தட்டிவிட்ட அமைச்சர்

தன்னுடன் செல்ஃபி எடுத்த முயன்ற நபர் ஒருவரின் கைகளை தட்டிவிட்டார் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார்.

 
காங்கிரஸ் கட்சியை கர்நாடக மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் ஹொசபேட்டையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ள நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடுகள் செய்ய சென்று இருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் அமைச்சருடன் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார்.
 
அமைச்சர் செல்ஃபி எடுக்க முயன்ரவரின் கைகளை தட்டிவிட்டார். இதில் செல்போன் கீழே விழுந்தது. அந்த நபரை அங்கிருந்து இழுத்துச் செல்ல அமைச்சர் சைகை மூலம் கூறினார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி உள்ளது. 
 
இதேபோல் கடந்த சில மாதங்கள் முன் அமைச்சர் சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் கைகளை தட்டி விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.