செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (17:39 IST)

ஐஜி சென்ற காருக்கு தீ வைத்த கலவர கும்பல்; கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடக மாநிலம் கும்டா பகுதியில் காவல்துறை ஐஜியை கலவர குமபல் காரோடு தீவைத்து எரிக்க முயற்சித்துள்ளனர்.

 
கர்நாடக மாநிலம் கும்டா பகுதியைச் சேர்ந்த 19 வயது இந்து வாலிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு இந்து அமைப்புகள் வன்முறையில் ஈடுப்பட்டன. கலவரத்தை கடக்க காவல்துறை குவிக்கப்பட்டிருந்தது. நிலைமை மோசமான நிலைக்கு சென்றதால் வன்முறை நடைபெறும் இடங்களை மேற்பார்வையிட மேற்கு மண்டல காவல்துறை ஐஜி ஹேமந்த் நிம்பால்கர் சென்றார்.
 
அப்போது வன்முறையில் ஈடுபட்டு இருந்த கலவரக்காரர்கள் ஐஜி சென்ற காருக்கு தீ வைத்தனர். இதையடுத்து ஐஜி தக்க நேரத்தில் காரில் இருந்து குதித்து தப்பினார். அவருடன் காரில் இருந்த பாதுகாப்பு போலீசாரும் தப்பினார். கார் முழுவதும் எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.