1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 27 ஜூலை 2016 (00:13 IST)

சாலையில் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட அமைச்சர் மகனுக்கு அடி உதை

கர்நாடக வனத்துறை அமைச்ச்சரின் மகன், தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு சாலையில் ஆட்டம் போட்டு, பொதுமக்களிடம் அடி வாங்கியுள்ளார்


 

 
கர்நாடக மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் ராமநாத் ராய் என்பவரின் மகன் தீபு ராய், கடந்த ஞாயிறன்று கொடகு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமங்களா கிராமத்தின் சாலையில் அவனது நண்பர்களுடன் குடித்துவிட்டு ஆட்டம் போட்டுள்ளார்.
 
அதோடு அங்கிருந்தவர்களுக்கு தொந்தரவு செய்துள்ளார். இதனால் கோபம்டைந்த அந்த பகுதி மக்கள் அவர்களை கண்டித்துள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே மேதல் ஏற்பட்டு, அமைச்சரின் மகன் மற்றும் அவனது நண்பர்கள் அடி வாங்கியுள்ளனர். 
 
மேலும் தீபுவை காவல் துறையினர் கைது செய்தனர்.