திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 11 ஜூலை 2019 (10:06 IST)

இதுக்கு மேல தாக்கு பிடிக்க முடியாது... ராஜினாமா செய்ய முன்வந்த முதல்வர்

கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று 11 மணி அளவில் கூடும் அமைச்சவை கூட்டத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால், இந்த ஆட்சி நிலைப்பதில் சாத்தியம் இல்லை என்று தெரிகிறது. ஏனெனில் இரு கட்சிகளை சேர்ந்த 13 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 
 
மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிகிறது. எனவே எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டதாலும், 2 சுயேட்சைகள் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டதாலும், பெரும்பான்மை பலத்தை குமாரசாமி தலைமையிலான அரசு இழந்து விட்டதாக கர்நாடக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
 
இப்படி பல பிரச்சனைகளுக்கு இடையே கர்நாடக அமைச்சரவை இன்று கூட உள்ளது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் குமாரசாமி தமது ராஜினாமா முடிவை அறிவிக்க இருப்பதாகவும், அரசைக் கலைக்குமாறு ஆளுநரிடம் நேரில் சென்று பரிந்துரை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.