திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2019 (09:14 IST)

டிரெய்லரே போதும் – மோடியை கேலி செய்த கபில் சிபில் !

சமீபத்தில் பேசிய மோடி தேசம் பாஜக ஆட்சியின் டிரைலரை மட்டுமே பார்த்துள்ளது, முழுப்படம் இனிமேல்தான் என்று சொன்னதை காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் கேலி செய்துள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து 100 நாட்களைக் கடந்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை, மோட்டர் வாகன சட்டம் மற்றும் காஷ்மீர் நிலவரம் ஆகியவற்றால் கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இது சம்மந்தமாக பேசிய ஜார்கண்ட்டில் பேசிய மோடி’ தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை 100 நாட்களில் நிறைவேற்றியுள்ளோம். இது வெறும் டிரைலர் மட்டும்தான். முழுப்படம் இனிமேல்தான் இருக்கிறது’ எனக் கூறினார்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் ‘என்னே ஓர் அற்புதமான டிரெய்லர் முதல் காலாண்டில் நமது பொருளாதாரம் 5சதவிகிதமாக சரிந்துள்ளது. 16 காலாண்டுகளில் இல்லாத அளவிலான வீழ்ச்சியாகும். மோடியின் ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை மட்டுமே 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதனால் டிரைலரே போதும் மீதமுள்ள படத்தை நான் பார்க்க விரும்பவில்லை’ எனக் கூறியுள்ளார்.