ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 24 ஜூலை 2020 (06:59 IST)

கொரோனாவால் இறந்த ஆசிரியரை இறுதி செய்ய செய்ய தயங்கிய உறவினர்கள்: கை கொடுத்த பத்திரிகையாளர்கள்

கொரோனாவால் இறந்த ஆசிரியரை இறுதி செய்ய செய்ய தயங்கிய உறவினர்கள்
கொரோனாவால் இறந்த ஒய்வு பெற்ற ஆசிரியர் உடலை இறுதி சடங்கு செய்ய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மறுத்ததால் அவரை பத்திரிகையாளர்கள் இறுதி சடங்கு செய்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டம் ஷர்கார்க் கிராமத்தில் வசித்து வந்த ஒய்வு பெற்ற ஆசிரியர் பீந்தாம்பர் பாதே. இவர் கொரோனா தொற்றால் சமீபத்தில் பாதிக்கபப்ட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவருடைய மகன்கள் வெளிநாட்டில் உள்ளதால் தகவல் தெரிவிக்கப்பட்டும் அவர்களால் வரமுடியவில்லை.
 
இதனையடுத்து உறவினர்கள், நண்பரக்ள்  இறந்த ஒய்வு ஆசிரியர் உடலை இறுதிசடங்கு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு இறுதிச்சடங்கு செய்தால் தங்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாக ஆசிரியரின் உடலை இறுதிச்சடங்கு செய்ய யாரும் முன்வரவில்லை
 
இந்த நிலையில் அஜித் பாண்டா, பாலாஜி பிரதான், மெகநாத் தாஸ், ஷங்கர் பிரதான் ஆகிய நான்கு பத்திரிகையாளர்கள் இதுகுறித்து தகவல் அறிந்து தாங்களாகவே முன்வந்து தகுந்த பாதுகாப்பு உடை அணிந்து ஆசிரியர் உடலை இடுகாட்டுக்கு எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பலரும் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.