சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா பலாத்கார கொலை வழக்கு: சந்தேக குற்றவாளி கைது!


Caston| Last Modified வியாழன், 16 ஜூன் 2016 (11:21 IST)
கேரளா மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபரால் கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார் கேரள சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா. இந்த வழக்கில் சந்தேகப்பட்ட குற்றவாளியான அஸ்ஸாமை சேர்ந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

 
 
கேரளா மாநிலம், பெரும்பாவூரில் தலித் சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாணவியின் உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து, மாணவியின் உடலில் 30 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, மாணவியின் தலையிலும், வயிறு பகுதியிலும் பலமாக தாக்கப்பட்டுள்ளது, மார்பகம் மற்றும் உறுப்பு பகுதி கூர்மையான அயுதங்களால் சிதைக்கப்பட்டுள்ளது என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.
 
டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் பலாத்காரம் போல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சந்தேகப்பட்டு வந்த நபரை காவல் துறை சமீபத்தில் கைது செய்துள்ளது. இந்த வழக்கை விசாரணை மேற்கொண்டு வந்த விசாரணை குழு கொச்சியில் இரண்டு தினங்களுக்கு முன் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை கைது செய்துள்ளது.
 
கைது செய்யப்பட்ட நபரின் டிஎன்ஏ மாதிரியை ஜிஷாவின் உடலில் இருந்து கைப்பற்றப்பட்ட இரத்தம் மற்றும் எச்சில் மாதிரியுடன் ஒப்பிட்டு உறுதி செய்ய அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி ஜிஷா மிகவும் மோசமான சிதைக்கப்பட்ட முறையில் கால்வாய் ஒன்றில் அருகில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
 


இதில் மேலும் படிக்கவும் :