1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (09:37 IST)

ஜார்கண்டில் திடீர் திருப்பம்: பாஜக முன்னிலை

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்த நிலையில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவின்படி காங்கிரஸ் முன்னிலையிலும் அதற்கு அடுத்த நிலையில் பாஜகவும் இருந்தது
 
ஜார்கண்டில் ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டியை காங்கிரஸ் கூட்டணி நெருங்கி வந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக சற்று முன் வெளிவந்த தகவலின்படி ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன 
 
இதன்படி பாஜக கூட்டணி 34 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 33 தொகுதிகளிலும் மற்றவை 14 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 42 தொகுதிகளில் வெற்றி இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில் இரு கூட்டணியும் கிட்டத்தட்ட சம நிலையில் இருப்பதால் ’மற்றவை’ எந்தக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறதோ அந்த கூட்டணியே ஆட்சி அமைய என்று எதிர்பார்க்கப்படுவதால் சிறிய கட்சிகளின் எம்.எல்.ஏக்களுக்கு கடும் போட்டி இருக்கும் என கருதப்படுகிறது