திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 மே 2024 (12:40 IST)

ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல்.. அதிர்ச்சி தகவல்..!

ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கிர் ஆலம் உதவியாளர் வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்படி ரூ.20 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததாகவும் அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது.
 
அரசு திட்டங்களை செயல்படுத்தியதில், பணமோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆலம்கிர் ஆலம் உதவியாளர் சஞ்சீவ் லால் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
 
இந்த சோதனையின்போது ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆலம்கிர் ஆலம் உதவியாளர் சஞ்சீவ் லால் இல்லத்தில் உள்ள ஒரு அறையில் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
இதே வழக்கில் மாநில ஊரக வளர்ச்சித்துறையின் தலைமை பொறியாளர் வீரேந்திர ராமு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran