புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 செப்டம்பர் 2018 (19:41 IST)

பெட்ரோலுக்கே வழி இல்ல... திண்டாடும் ஜெட் ஏர்வேஸ்

இந்தியாவில் விமான சேவை நடத்தி வரும் ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ மற்றும் ஜெட் ஏர்வேஸில் இண்டிகோ மட்டுமே லாபத்தில் இயங்கி வருவதாக தெரிகிறது. 

 
மற்ற மூன்று விமான நிறுவனங்களின் நிலை சற்று மோசமாக உள்ளதாம். குறிப்பாக ஜெட் ஏர்வேஸ் கடந்த ஜூன் 2018 காலாண்டில் 1,323 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தால் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கே இன்னும் சம்பளம் கொடுக்கவில்லையாம். 
 
ஆகஸ்ட் மாத சம்பளத்தில் இன்னும் 25% இன்னும் கொடுக்காமல் வைத்துள்ளரனராம். இதனால், கடுப்பான உழியர்கல் நிறுவனத்தை முற்றுகையிட அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் கொடுத்துவிடுவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம். 
 
இது குறித்து ஜெட் ஏர்வேஸ் தரப்பு கூறியது பின்வருமாறு, அதிகரித்து வரும் ஏர் டர்பைன் ஃப்யூலலின் (விமான எரிபொருள்) விலையை சமாளிக்க முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறோம். இதில் நஷ்டம் வேறு ஒரு பக்கம். இதனால்தான் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என கூறியதாக கூறப்படுகிறது.