மோடியின் புதிய அமைச்சரவையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?
மீண்டும் நாளை பிரதமராக பதவியேற்க உள்ள மோடியின் அமைச்சரவையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு உண்டு என்ற யூகம் வெளியாகியுள்ளது.
நாளை மே 30 அன்று 60 முதல் 66 அமைச்சர்கள் பதவியேற்கலாம். அதில் மேற்கு வங்கம், தெலங்கானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் இருப்பார்கள் என்று தெரிகிறது.
பாஜக மீண்டும் ஆட்சியமைக்க அதிகம் உழைத்த அமித் ஷா புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், ரவி சங்கர் பிரசாத் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.
அதேபோல் அதிமுக, லோக் ஜனசக்தி கட்சி, சிரோன்மணி அகாலி தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஓர் அமைச்சர் பதவியும், சிவ சேனா ஆகிய கட்சிகளுக்கு இரு அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.