ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 14 மார்ச் 2018 (20:41 IST)

பார்ட் டைம் அரசியல்வாதி: ரஜினியை கலாய்த்த ஜெயகுமார்...

இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை கிண்டல் செய்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசியுள்ளார். 
 
ரஜினி அரசியல் பேசுவதில்லை என கமல் தெரிவித்த குற்றச்சாட்டிற்கு நடிகர் ரஜினி இது ஆன்மிக பயணம் என்றும் அரசியல் பேசும் இடமில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இன்னும் தான் முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை என்றும் கூறியுருந்தார். 
 
ரஜினியின் கருத்தை கேலி செய்து அமைச்சர் விஜயகுமார் பின்வருமாறு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலில் ஈடுபட்டுள்ளதால் அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்ப்பதாக கூறுகிறார். 
 
உலகத்திலேயே அரசியல்வாதிகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆன்மிகவாதிகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அரசியலில் ஒரு பகுதிநேர அரசியல்வாதி என்று கண்டுபிடித்த ஒரே ஆன்மிக ஞானி ரஜினிதான். இன்னும் 3 மாதத்தில் கழித்து அரசியலில் தற்காலிக ஊழியராக இருப்பேன் என்பார் என தெரிவித்துள்ளார்.