1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 28 அக்டோபர் 2017 (19:27 IST)

தீவிரவாதியாக மாறிய போலீஸ்காரர்? சமூக வலைதளத்தில் சர்ச்சை புகைப்படம்

விடுமுறைக்கு சென்ற போலீஸ்காரர் ஒருவர் சமூக வலைதளத்தில் இயந்திர துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இஷாப் அகமத் என்பவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கதுவா மாவட்டத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் போலீசாக பணிபுரிந்து வந்தார்.  இவர்  சில நாட்களுக்கு முன் விடுமுறையில் சென்றுள்ளார். விடுமுறை காலம் முடிந்து கடந்த 23ஆம் தேதி பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர் திரும்பவில்லை.  
 
இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவர் இயந்திர துப்பாக்கியுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.
 
எட்டு போலீஸ் அதிகாரிகள் பணியில் இருந்து  விலகி தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்து உள்ளது குறிப்பிட தக்கது. அகமதும் இந்த வரிசையில் இருக்கலாம் என கூறப்படுகிறது.