ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 6 ஜூலை 2019 (12:23 IST)

சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் வீரர்கள் – ஜெய்ப்பூரில் ஆச்சர்ய சம்பவம்

ராஜஸ்தானில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரனை விரட்டியடித்து, சிறுமியை காப்பாற்றிய சிறுவர்களை ஜெய்ப்பூர் காவல்த்துறையினர் பாராட்டியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் ஜவஹர் நகரில் வசித்து வரும் சிறுவர்கள் மனீஷ், படேல், அமித், ரோஹித். பள்ளிக்கூடம் முடிந்ததும் அருகில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் சென்று கிரிக்கெட் விளையாடுவது இவர்கள் வழக்கம்.

அன்று வழக்கம் போல கிரிக்கெட் விளையாட சென்றிருக்கிறார்கள் சிறுவர்கள். அப்போது ஒரு அழுகுரல் தூரத்தில் கேட்டிருக்கிறது. என்னவென்று அறிய முற்பட்ட சிறுவர்கள் சத்தம் கேட்ட பக்கமாக சென்றிருக்கின்றனர். அங்கு ஒரு புதர் மறைவில் சிறுமி ஒருத்தியை கொடூரன் ஒருவன் கற்பழிக்க முயன்று கொண்டிருந்தான். இதை பார்த்த சிறுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுமியை எப்படியாவது காப்பாற்ற நினைத்த சிறுவர்கள் தங்களிடம் இருந்த கிரிக்கெட் பேட்டால் அந்த நபரை சரமாரியாக அடித்தனர். அந்த சிறுவர்களிடம் எகிற ஆரம்பித்தார். ஸ்டம்புகளாலும், பேட்டாலும் அடித்து அந்த நபரை நிலை குலைய செய்தனர் சிறுவர்கள். பிறகு ஒரு சிறுவன் ஓடிப்போய் போலீஸுக்கு தகவல் சொல்லியிருக்கின்றான். விரைந்து வந்த போலீஸ் அடிப்பட்டு கிடந்த அந்த நபரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட காவல்துறை இயக்குனர் சோனி அந்த சிறுவர்களை அழைத்து அவர்களுக்கு நினைவுப்பரிசு, சான்றிதழ், ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார்.