வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 மே 2023 (11:54 IST)

இந்தியாவுக்காக விளையாடாம இருக்கதே நல்லது..!? – வினேஷ் போகத் வேதனை!

Vinesh Phogat
டெல்லியில் நடந்து வரும் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போராட்டத்தில் போலீஸாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவரும், பாஜக எம்பியுமாக இருப்பவர் பிரிஜ் பூஷன். இவர் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டை முன்வைத்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கடந்த பல நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு டெல்லி போலீஸாருக்கும், போராட்டம் நடத்தி வரும் வீரர்கள், வீராங்கனைகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அரசு தொடர்ந்து தங்களது கோரிக்கையை ஏற்காமல் இருப்பது குறித்து வேதனையுடன் பேசிய இந்தியாவுக்காக தங்கம் வென்ற வீராங்கனை வினேஷ் போகத் “அரசு எங்களை கஷ்யப்படுத்தி வரும் விதத்தை பார்க்கும்போது எந்த ஒரு விளையாட்டு வீரரும் நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டாம் என்றே விரும்புவேன்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K