1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 மே 2023 (19:03 IST)

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் எடுத்த அதிரடி முடிவு... இன்று டெல்லிக்கு வாழ்வா சாவா போட்டி..!

ஐபிஎல் தொடரின் 44வது  போட்டி இன்று டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று அதிரடியாக பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். 
 
இதனை அடுத்து டெல்லி அணி பேட்ஸ்மேன்கள் இன்னும் சில நிமிடங்களில் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணியை பொருத்தவரை புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் உள்ளது. 
 
இன்றைய போட்டியில் அந்த அணி தோல்வியை அடைந்து விட்டால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது என்ற நிலை ஏற்படும். அதனால் வாழ்வா சாவா என்ற இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
குஜராத் அணியை பொருத்தவரை 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருப்பதால் அந்த அணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran