சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம்.. தேதியை அறிவித்த இஸ்ரோ..!
இந்தியாவின் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 என்ற விண்கலம், நிலவின் தென்துருவத்தை அடைந்தது என்பதும் அதிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் தற்போது நிலவில் உலவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெற்றிகரமாக இஸ்ரோவின் சந்திராயன் 3 விண்கலம் நிலவை அடைந்ததை அடுத்து சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல்1என்ற விண்கலம் விரைவில் செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்
அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவலின் படி சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை செப்டம்பர் இரண்டாம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது என்று தகவல் வெளியாகியுள்ளன.
சந்திராயன் 3 வெற்றியை தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த அதிரடியாக இந்த நிகழ்வை பார்க்க முடிகிறது. இது குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Edited by Mahendran