திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 7 ஜனவரி 2024 (08:05 IST)

குளிர்காய்ச்சலா? சூரியன் பக்கத்துல உட்காருங்க சரியாகிடும்: கலைஞர் 100 விழாவில் ரஜினிகாந்த்

குளிர் காய்ச்சலா? சூரியன் அருகே உட்காருங்கள் சரியாகும் என்று கலைஞர் என்னிடம் கூறினார் என நேற்று நடந்த கலைஞர் 100 விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார்.

இந்த விழாவில் அவர் பேசியபோது ’கலைஞருக்கு நெருக்கமான நடிகர் ஒருத்தர். அவரோட படத்தை கலைஞருக்கு போட்டு காட்ட பிரிவியூ ஷோ ஏற்பாடு பண்ணி இருந்தார்.

அந்த சமயத்தில் வாக்குப்பதிவு நடந்தது. ஓட்டு போட்ட அந்த நடிகர் கிட்ட யாருக்கு ஓட்டு போட்டீங்க என்று பத்திரிகையாளர் கேட்க, அவர் இரட்டை இலை என்று பதிலளித்துவிட்டார். பத்திரிகைகளில் அது பெரிய செய்தி ஆகிவிட்டது.

இப்போது அந்த நடிகருக்கு கலைஞருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிவியூ ஷோவுக்கு செல்வதில் சங்கடம். அதனால் குளிர் காய்ச்சல் என கூறி பிரிவியூ ஷோவுக்கு செல்லாமல் தவிர்க்க நினைத்தார். ஆனால் கலைஞர் தியேட்டரிலேயே அந்த நடிகருக்காக காத்திருந்தார்

அந்த நடிகர் தியேட்டருக்கு வந்தார். என்னங்க குளிர் காய்ச்சல்ன்னு சொன்னீங்க சூரியன் பக்கத்துல உட்காருங்க, சரியாகிவிடும் என்று சொல்லி  கலைஞர் அந்த நடிகரை பக்கத்தில்  உட்கார வைத்தார்

அந்த நடிகர் வேறு யாருமில்லை இந்த ரஜினிகாந்த் தான் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விழாவில் பேசினார்.

Edited by Siva