கடல் மேல் கப்பலுக்கு கப்பல் தாவிச் செல்லும் வீரர்... வைரல் வீடியோ
மனிதனின் ஆற்றலுக்கும் கற்பனைக்கு அளவே இல்லை. அவன் மீனைப் பார்த்தான், படகும் கப்பலும் செய்தான். பறவையைப் பார்த்தான் விமானம் கண்டுபிடித்தான்.
அப்படி மனிதனின் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. அவரது டதொழில் நுட்பச் சாதனைகளுக்கு அளவே இல்லை.
இந்நிலையில் ராபர்ட் டி நீரோ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்..
அதில், ஒரு கடற்படை வீரர் ஒருவர் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில், இருந்து ஒரு கேஸ் போன்ற எரிபொருள் நிரப்பிய கருவியை தனது உடலில் பொருத்திக் கொண்டு ஆங்காங்கே நின்றிருந்த கப்பல்களுக்கு அவர் பறந்து சென்றார்.