செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 7 பிப்ரவரி 2019 (15:39 IST)

அப்ரூவராக மாறும் இந்திராணி முகர்ஜி? சிக்கலில் சிதம்பரம் ஃபேமிலி

காங்கிரஸ் ஆட்சியின் போது ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. 
 
அதாவது, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த உதவியை செய்ததாகவும், இதற்காக பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த  வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, அப்ரூவராக மாற உள்ளாராம். 
 
இந்திராணி முகர்ஜி ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர். இவர் ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
இப்போது இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறும் பட்சத்தில் சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோருக்கு பெரும் ஆபத்து ஏற்படக்கூடும் என தெரிகிறது.