புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 2 பிப்ரவரி 2019 (18:03 IST)

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஆபத்தா? அவசரமாக டெல்லி சென்ற திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் திருநாவுக்கரசு மீது அதிகமாக அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் அவரை மாற்ற வேண்டும் என்ற குரல் கடந்த சில மாதங்களாக ஓங்கி ஒலித்தது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின் தமிழக காங்கிரஸ் தலைவரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மாற்றுவார் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறின

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் குறித்த முக்கிய முடிவை எடுக்க டெல்லியில் தற்போது ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பதவி தப்புமா என்பது, டில்லியில் இன்று நடக்கும் கூட்டத்திற்கு பின் தெரிய வரும் என, காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருனாவுக்கரசர் அவசர அவசரமாக, சற்றுமுன் டெல்லி சென்றுள்ளார். புதிய தமிழக காங்கிரஸ் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன், ப.சிதம்பரம், குஷ்பு உள்ளிட்ட ஒருசில பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது