செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2024 (09:29 IST)

உலகத்தில் அதிகமான தங்கம் வைத்துள்ள இந்திய பெண்கள்! ஆய்வில் வெளியான ஆச்சர்ய தகவல்!

Gold

உலக அளவில் தங்கத்திற்கான மதிப்பு அதிகமாக உள்ள நிலையில், உலக நாடுகளில் எந்த நாடு அதிகமான தங்கம் வைத்துள்ளது என்று உலக கோல்டு கவுன்சில் அறிவித்துள்ளது.

 

 

தங்கம் என்பது இரும்பு, எஃகு போன்ற ஒரு தனிம வகை என்றாலும் இந்தியாவை பொறுத்தவரை அது காலம்காலமாக மதிப்புமிக்க ஆபரணங்கள் செய்வதற்கான பொருளாக பயன்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டில் சீனா உள்ளிட்ட பல நாடுகள் உலகளாவிய அளவில் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்யத் தொடங்கியதால் தங்கம் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.

 

தற்போது உலக அளவில் அதிக தங்கம் வைத்துள்ள நாடுகள் குறித்து உலக கோல்டு கவுன்சில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உலக அளவில் தங்கம் அதிகம் வைத்துள்ள நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதிலும் உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 11 சதவீதம் தங்கம் இந்திய பெண்களிடம்தான் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 24 ஆயிரம் டன் தங்கமாகும்.

 

அதில் தமிழ்நாட்டு பெண்கள் மட்டும் 6,720 டன் தங்கம் வைத்துள்ளனராம். வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனியிடம் கூட மொத்தமாக இதை விட குறைவாகவே தங்கம் உள்ளது. அமெரிக்காவிடம் 8 ஆயிரம் டன்னும், ஜெர்மனியிடம் 3,300 டன்னு, பிரான்ஸ் நாட்டிடம் 2,400 டன்னும் தங்கம் உள்ளது என உலக கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K