வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (10:10 IST)

அமேசான், ப்ளிப்கார்ட்டுக்கு எதிராக போராட்டம்! – வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!

அமேசான், ப்ளிப்கார்ட்டுக்கு எதிராக போராட்டம்! – வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!
வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வர்த்தக விதிகளை மீறுவதாக வர்த்தகர்கள் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் இதனால் சிறு வணிகர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு நடத்திய ஆலோசனையில் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களின் வருகையால் உள்நாட்டு வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதையும், நுகர்வோர் சட்ட விதிகளை அவை மீறுவதையும் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.