இந்தியாவுடன் கூட்டு பயிற்சியில் ஜப்பான், அமெரிக்கா
இந்தோ-ஆசியா பசிபிக் பகுதியில் பல்வேறு கடல் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சந்திக்க இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய கூட்டு பயிற்சியில் ஈடுப்பட உள்ளனர்.
இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து மலபார் 2017-யில் பங்கேற்க உள்ளன. மலபார் 2017-யின் நோக்கம் தொடர்ச்சியாக பயிற்சிகளில் ஈடுப்படுவது மூலம் இந்தோ-ஆசியா பசிபிக் பகுதியில் பல்வேறு கடல் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் உள்ள சிக்கல்களை சந்திக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி கடல் மற்றும் கரையில் நடைப்பெறும். இந்த பயிற்சியில் உயர்மட்ட போர் வீர திறன்களில் கவனம் செலுத்தப்படும். மூன்று நாடுகளும் மீண்டும் இணைந்து வேலை செய்தவன் மூலம் இந்தோ-ஆசியா பசிபிக் பகுதியில் நிலையான பாதுகாப்பு வழங்க முடியும் என கருதப்படுகிறது.