1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (09:21 IST)

இலவசங்கள் தருவதை நிறுத்த முடியாது..! – இந்திய தேர்தல் ஆணையம் பதில்!

supreme court
மாநில அரசுகள் இலவசங்கள் வழங்குவதை நிறுத்த கோரிய வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

இந்திய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படும்போது மாநில கட்சிகள் பல தேர்தலுக்காக பல இலவச பொருட்கள் மற்றும் திட்டங்களை கூட அறிவிப்பது வழக்கமாகியுள்ளது. சமீபத்தில் பிரதமருடன் நடந்த கூட்டத்தில் இதுபோன்ற இலவச அறிவிப்புகள் இந்திய பொருளாதாரத்தை பாதிப்பதாக நிபுணர்கள் தெரிவித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தலைமை தேர்தல் ஆணையம் இலவசங்கள் வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணையில் விளக்கம் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் “தேர்தலுக்கு முன்பும், பின்னரும் இலவசங்களை அறிவிப்பது அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவு. இலவசங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரம் எங்களுக்கு இல்லை” என பதிலளித்துள்ளது.