வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜூன் 2022 (15:48 IST)

போராட்டம் நடத்தியவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை..! – அதிர்ச்சி அறிவிப்பு!

agneepath protest
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ராணுவத்தில் 4 ஆண்டுகள் குறுகிய கால பணி அளிக்கும் அக்னிபாத் ராணுவப்பணி திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல பகுதிகளில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக போராட்டம் நடத்திய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு ராணுவத்தில் இடம் கிடையாது என ராணுவ விவகாரங்கள் துறை அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ”ராணுவத்தில் பணியாற்ற ஒழுக்கம், அர்ப்பணிப்பு உணர்வு முக்கியம். எனவே அக்னிபாத் திட்டத்திற்கு விண்ணப்பிப்போரிடம் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்ற உறுதி சான்று பெறப்படும். அது உறுதிபடுத்தப்பட்டவுடன் அவர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுவர். போராட்டம் நடத்தியவர்கள் அக்னிபாத் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது” என கூறப்பட்டுள்ளது. இது மேலும் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.