வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 டிசம்பர் 2017 (11:43 IST)

பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும்; சுப்பிரமணிய சுவாமி

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்து, நான்கு பாகங்களாக பிரிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையின் முன்னால் அதிகாரி குல்புஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி, அவரை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. பல்வேறு இடர்பாடுகளிக்கிடையே குல்புஷன் ஜாதவை பார்க்க அவரது மனைவி மற்றும் தாயாருக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியது. இதற்கிடையே இஸ்லாமாபாத்தில் ஜாதவின் மனைவியும், தாயாரும் அவரை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது பாதுகாப்பு என்ற பெயரில் அவரது மனைவியின் தாலி, வளையல்கள், காலணிகளை கழற்ற வைத்தும் நெற்றியில் இருந்த பொட்டை அழிக்கச் செய்தும் அட்டூழியம் செய்துள்ளது பாகிஸ்தான் அரசு. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது
பாகிஸ்தானின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி இது ஜாதவின் குடும்பத்தினரை மிகவும் பாதித்திருக்கும் என்றார். மேலும் பாகிஸ்தான் மீது போர் தொடுத்து, நான்கு துண்டுகளாக பிரிக்க வேண்டும் என்றார். அண்டை நாடுடனான மோதலுக்கு, அதை உடைப்பது மட்டுமே ஒரே தீரவாக இருக்கும் என்றார்.