ரஷ்ய தடுப்பூசி சோதனைக்கு இந்தியாவில் அனுமதி மறுப்பு!? – மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்!

Prasanth Karthick| Last Modified வியாழன், 1 ஜூலை 2021 (11:02 IST)
ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல சமீபத்தில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரித்த விஞ்ஞானிகளால் ஸ்புட்னிக் லைட் என்ற தடுப்பூசியும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஸ்புட்னிக் லைட் ஒரே டோஸில் கொரோனாவுக்கு எதிரான செயல்படும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. இந்த கொரோனா லைட் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் நடத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :